கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே வெள்ளங்கோடு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டனர் .அப்போது ஊராட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து மக்கள் எழுப்பிய கேள்விக்கு முறையாக பதில் கூறாமலும் மனுக்கள் பெறதாலும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடந்த அரசு பள்ளியில் இருந்து அதிகாரிகள் வெளியேற முயலும் போது மக்கள் பள்ளியின் கேட்டை அடைத்து வெளியே விடாமல் தடுத்தனர்.இந்த நிலையில் அவசரம் அவசரமாக வெளியேறினார் அதிகாரிகள். முறையாக கிராம சபை கூட்டம் நடைபெறாததால் மீண்டும் மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
DES : The general public who was captured by the authorities at the Gram Sabha meeting.