வேலைக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக நடிகை பானுப்ரியா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பானுப்ரியா வீட்டில் பணியாற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் இந்தப் புகாரை அளித்துள்ளார். தனது புகாரில் அவர், 'மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு எனது மகளை பானுப்ரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பினோம். ஆனால் ஒன்றரை வருடங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை, மேலும் பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதுபற்றி அறிந்ததும் நேரில் சென்று கேட்டேன். அப்போது 'எங்களிடம் பணம் உள்ளது. உன் மகளை திருட்டு பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம்' என மிரட்டினார்கள்" என அச்சிறுமியின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
#BanuPriya
#Police
#Andhra