10 குடிசை வீடுகள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் வேலூரில் பரபரப்பு - வீடியோ

2019-01-24 375

வேலூர்மாவட்டம்,வேலூர் சேண்பாக்கத்தில் செல்வ விநாயகர் ஆலயம் அருகில் உள்ள குடிசை வீடுகளில் பத்துவீடுகள் தீயில் கருகியது ஒரு வீட்டிலிருந்து பிடித்த தீ காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அனைத்து வீடுகளுக்கும் தீ வேகமாக பரவி குடிசை வீடுகள் அனைத்தும் தீப்பற்றி மளமளவென எரிந்தது தகவல் அறிந்த வேலூர் தீயணைப்புத்துறையினர் இரண்டு வாகனங்களுடன் வந்து தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டு சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அனைத்தனர் அதற்கு வீடுகளிலிருந்த இருசக்கர வாகனம் பீரோவில் இருந்த பொருட்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது வீடுகளில் கேஸ் சிலிண்டர்கள் இருந்ததால் அவைகளும் தீயில் எரிந்து வெடிக்கும் நிலை ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் சாமார்த்தியமாக அங்கிருந்த 3 சிலிண்டர்களையும் அப்புறப்படுத்தினார்கள் தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை இதுகுறித்து வேலூர் தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் சம்பவ இடத்தில் வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்



Des : 10 Cottage homes suddenly burned fire in Vellore

Videos similaires