தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரிக்கரையில் சத்குரு ஸ்ரீதியாகராஜரின் 172 -வது ஆராதனை விழா மங்கள இசையுடன் நடைபெற்றது இசை விழாவை பத்மபூஷன் கலைமாமணி டி.வி.கோபாலகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் தொடர்ந்து இந்த விழாவில் இசைக் கலைஞர்கள் தியாகராஜரின் கீர்த்தனைகளை பாடி இசை அஞ்சலி செலுத்துகின்றனர் 21 ஆம் தேதி தொடங்கிய ஆராதனை விழா வரும் 25 ஆம் தேதியுடன் நிறை வடைகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை அதாவது 100 கணக்கான இசைக் கலைஞர்கள் ஒன்றாக இணைந்து கீர்த்தனைகளை பாடியும் இசையஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி 25 ஆம் தேதி காலை நடைபெறுகிறதுஆராதனை விழா துவங்கிய தியாகராஜரின் சமாதி பகுதியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் காட்டப்பட்டனசங்கீதமும்மூர்த்தி களில் ஒருவரான தியாகராஜர் திருவாரூரில் பிறந்து பின்னா திருவையாறு காவிரி கரையருகே தங்கி ராமபிரான் மீது அளவு கடந்த பக்தி கொண்டு ஏராளமான கீர்த்தனைகளை தெலுங்கில் பாடி திருவையாறு காவிரிக்கரையில் முக்தி அடைந்தார் இந்நிலையில் அவரை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவர் முக்தி அடைந்த ஆஸ்ரமத்தில் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது
Des : Sri Lankan 172 rd service