சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் ரயில்வே சரக்கு ஏற்றும் நிலையத்தில் பணியாற்றும் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் சிலர் வந்தனர். அப்போது ரயில்பாதையில் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் இது குறித்து மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் சேலம் ஜங்சன் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து விரைந்து வந்த ரயில்வே மற்றும் மாநகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வாலிபரின் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் ரயில் பாதையின் அருகே ரத்த கரை படிந்திருந்த கத்தி ஒன்றும் கிடந்தது. அந்தக் கத்தியை கைப்பற்றி ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடக்கும் நபர் யார் என்பது பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பின்னர் விசாரணையில் அந்த நபரை யாரோ கத்தியால் கழுத்தை அறுத்து கொன்று சடலத்தை ரயில் பாதையில் வீசி இருப்பது தெரியவந்தது.இந்த கொலை சம்பவம் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Des:
Man sticks out of the train track