கர்நாடக மாநிலம் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு என்னும் பகுதியில் கர்நாடக அரசு அணைக்கட்ட மும்முரம் காட்டி வருகிறது, இந்நிலையில் கன்னட கூட்டமைப்பின் மாநில தலைவர் வாட்டல் நாகராஜ் தலைமையில் தமிழக - கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி என்னும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பின்பு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கன்னட கூட்டமைப்பு தலைவர் வாட்டல் நாகராஜ் மேகதாட்டில் அணைக்கட்டும் கர்நாடக அரசு, விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கர்நாடகத்தில் கன்னடர்களால் கட்டப்படும் அணையை தமிழக அரசியல் கட்சியினரின் எதிர்ப்பை வண்மையாக கண்டிக்கிறோம், தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் காரணங்களுக்காகவே குடிநீருக்காக கட்டப்படுகிற மேகதாட்டு அணையை எதிர்க்கின்றனர், தமிழக முதல்வர்,துணை முதல்வர், எதிர்க்கட்சிகளை எச்சரித்து கொள்கிறோம்
Des: Nagaraj warns Tamil Nadu political parties