10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வேண்டாம்.. தம்பிதுரை ஆவேசம்- வீடியோ

2019-01-11 283

பொருளாதார ரீதியாக நிறைவேற்ற திட்டங்கள் இருக்கிறது. ஆனால் ஜாதியை மாற்ற திட்டங்கள் இல்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டில், அதிமுக நிறுவனத்தலைவர் பிறந்த நாள் ஜனவரியிலும்,அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா பிறந்தநாள் பிப்ரவரி மாதத்தில் வருவதால்,அதிமுகவின் கொள்கைகளை வகுத்து தந்த அந்தமாபெரு தலைவர்களின் செயல்பாடுகளை கட்சியினரும் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி.திரை பொறுத்தப்பட்ட வாகனங்கள் மூலம் பிரச்சாரம் செய்யும் நிகழ்வு கரூரைஅடுத்த கோடங்கிபட்டி என்னுமிடத்தில் மக்களவி துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு செல்ல துவக்கி வைத்தார்தம்பிதுரை.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10-சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்தது தவறானது,இந்தியா முழுமைக்கும் ஜாதிய அடிப்படியில் தான் வாழ்ந்துவருகிறோம்.அதனால் தான் இந்திய அரசியல் சட்டத்திலே சமூக நீதி அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சட்டம் இயற்றபட்டது. அதுவும் தமிழகத்தில் இருந்த சமூக நீதி கட்சிதான் முதன் முதலில் தமிழகத்தில்சட்டம் இயற்றியது. இது தான் சரி என்று அப்போதைய பிரதமர் நேரு உள்பட இந்த திட்டத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டு வர பாரளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் தற்போது பொருளாதாரத்தில்பின் தங்கியவருக்கு 10-சதவிகிதம் இட ஒதுக்கீடு என்கிறார்கள். இவர்கள் திட்டப்படி இன்று வருடம் 8-லட்சம் சம்பாதிப்பவர்கள்,வருமான வரிசெலுத்துபவர்கள் இத்திட்டத்தில் இட ஒதுக்கீடுபெற்று அவர்கள் ஒருமாததிலோ அல்லது ஒரு வருடத்திலோ அதிகமாக ஒரு கோடி வரை சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டால் இந்த ஒதுக்கீட்டை திரும்ப பெற முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

Des : Do not have reservations for 10-percent brotherhood