தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நியாய விலைக் கடைகளுக்கு ஒவ்வொரு மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகள் விடுமுறையாகும். இதற்குப் பதிலாக, ஞாயிற்றுக்கிழமைகள் கடைகள் இயங்கி வருகின்றன. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருவதால், வரும் 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நியாய விலைக் கடைகள் செயல்படும். மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள எடையாளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவர் இன்று பொங்கல் பரிசு தொகை ரூபாய் 1000 வாங்க நியாய விலை கடைக்கு சென்றிருந்த பொழுது மாரடைப்பால் உயிரிழந்தார் இது குறித்து அச்சிறுப் பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்