ஓடும் ரயிலில் 10 லட்சம் கொள்ளை!!! நள்ளிரவில் துணிகரம் - வீடியோ

2019-01-09 353

ஈரோட்டிலிருந்து சென்னை நோக்கி நள்ளிரவில் சென்று கொண்டிருந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் பெரியசாமி என்பவர் கான்ரெக்ட் விஷயமாக ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபரிடம் பணத்தை பெற்று கொண்டு வந்தபோது வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே கண் விழித்து பார்த்தபோது தான் கொண்டு வந்த சூட்கேஸ் காணமால் போயிருப்பதை‌ கண்டு அதிர்ச்சி அடைந்தார்.‌ இதுகுறித்து பெரியசாமி சென்னை ரயில்வே பாதுகாப்பு போலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட ரயில்வே போலிசாருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சூட்கேஸ் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பச்சகுப்பம் என்னும் இடத்தில் விடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த ரயில் கொள்ளை சம்பவம் குறித்து சென்னை மண்டல ரயில்வே பாதுகாப்பு படை போலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் ரயிலில் நள்ளிரவு நேரத்தில் 10 லட்சம் ரூபாய் கொள்ளை போன சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Des: Rs 10 lakh robbery Midnight adventure

Videos similaires