திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சில்பா தனது மகளைப் பாளையங்கோட்டையில் உள்ள அரசு குழந்தைகள் மையத்தில் சேர்த்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக சில்பா மேமாதம் 25ஆம் நாள் பொறுப்பேற்றார். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில் அரசு ஊழியர்களும் அரசு பள்ளி ஆசிரியர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்கிற கருத்து எழுந்துள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சில்பா, தனது மகள் கீதுவை பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகம் அருகே அமைந்துள்ள அரசு குழந்தைகள் மையத்தில் சேர்த்துள்ளார்.
அரசு பள்ளிகளை நம்பியே ஏழை மாணவர்களின் எதிர்காலம் இருக்கும் சூழலில் அவற்றைக் காக்கும் வகையில், அரசு பள்ளியில் தனது குழந்தையைச் சேர்த்துப் படிக்க வைத்துள்ள திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சில்பா பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
DES: The Chilpa Approach and the Honorable Author of the Child in the Government Center.