சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைப்பெற்றது. சண்முகம் மற்றும் மில்டன் ஆகியோரின் தலைமையில் நடைப்பெற்ற இச்சிலம்பம் போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, மதுரை,நாகர்கோவில், கோயம்புத்தூர்,உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 600 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.குறைந்தபட்சம் 5 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கான சிலம்பம் போட்டிகள் நடத்தபட்டன. இதில் அவர்களுடைய தனித்திறமை மற்றும் தொடு திறன் ஆகியவற்றை ஆராய்ந்து வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கபட்டன.இறுதியாக இன்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்கம்,வெள்ளி உள்ளிட்ட பதக்கம் மற்றும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கபட்டன.மேலும் மாவட்ட அளவில் நடைப்பெற்ற இப்போட்டியில் வெற்றி மாணவ மாணவிகள் மாநில அளவில் நடைபெறுகின்ற சிலம்பம் போட்டியில் கலந்து கொள்வார்கள் என தெறிவிக்கபட்டன.இந்நிகழ்வில் மாணவ மாணவிகள் அவர்களுடைய பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
DES: Tamil Games silampattam, Several students hammering hammer