தஞ்சாவூர் தமிழக பறை இசைக் கலைஞர்களின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கண்டியூர் வீரமணி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் வீட்டு மனை இல்லாத அனைத்து பறை இசைக் கலைஞாகளுக்கும் உடன் வீட்டு மனை வழங்கிடவும். தென்னகப் பண்பாட்டு மையம், கலைப்பண்பாட்டுத் துறையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் 30 சதம் பறை இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்திடவும். கலைப்பண்பாட்டுத்துறையினர் அைனத்து பறை இசைக் கலைஞர்களுக்கும் நல வாரிய அட்டை வழங்க வேண்டும், நலிந்த பறை இசைக் கலைஞர்களுக்கு அரசு தாமதமின்றி ஒய்வூதியம் வழங்க வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மாவட்டச் செயலாளர் ஜான்சன், பொருளாளர் துரைராஜ். மகளிர் அணி கலா உள்ளிட்ட திரளான பறை இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர்.முன்னதாக பறை இசைக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
DES: Artists demanding recognition