ஒரே இடத்தில் வழக்கு பதிவு ..வேலூரில் தொடக்கம்

2019-01-03 627

வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்யும் மையம் ஒன்றை மாவட்ட நீதிபதி ஆனந்தி குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார் இதில் சி.ஜேஎம் நீதிபதி பாரி,குடும்ப நல நீதிபதி லதா,மகளிர் நீதிமன்ற நீதிபதி செல்வம் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர் ஒருங்கிணைந்த மையம் திறந்து வைக்கப்பட்டது இதில் 6 கவுண்டர்கள் உள்ளன மகளிர் நீதிமன்றம் தொழிலாளர் நீதிமன்றம் ,குடும்ப நல நீதிமன்றம்,சிவில் வழக்கு,பொதுபிரிவு என உள்ளது இங்கு அனைத்து நீதிமன்றங்களுக்கும் வழக்குகளை தாக்கல் செய்தால் இங்கேயே ஒப்புகை சீட்டு வழங்கப்படும் அத்துடன் வழக்கறிஞர்களுக்கும் வழக்காடிகளுக்கும் வழக்கின் விசாரணை தேதி விவரங்கள் குறுஞ்செய்திகளாக அனுப்பப்படும் வழக்கு முடியும் வரை அனைத்து வழக்குவிவரங்களும் இருதரப்பினருக்கும் தெரியப்படுத்துவதால் வழக்குகள் விரைந்து முடிக்கப்படும் அத்துடன் காகிதமில்லாமல் கணினி முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது இதன் மூலம் பொதுமக்கள் வழக்கறிஞர்கள் என அனைத்துத்தரப்பினரும் இந்த மையம் மூலம் பயனடைவார்கள் இவ்விழாவில் திரளான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்

The case is registered in one place .. Start in Velur

Videos similaires