வங்கியில் குறி வைத்து கொள்ளைஅடிக்கும் கும்பல் கைது

2018-12-29 384

தமிழ்நாடு உட்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வங்கியில் பணம் எடுத்து செல்லும் நபர்களை குறி வைத்து கொள்ளையடிக்கும் 6 பேர் கொண்ட கும்பல் கைது அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனம், 30000 ரூபாய் பணம் பறிமுதல்.



திருவான்மியூரில் மட்டும் மூன்று இடங்களில் கவனத்தை திசை திருப்பியும், காரின் கண்ணாடியை உண்டிகோல் கொண்டு உடைத்து பணத்தை திருடியுள்ளனர். இதனால் வங்கிக்கு சென்று பணம் எடுத்துச் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கும், அச்சத்திற்கும் ஆளானர்கள் இதனையடுத்து அடையார் துணை ஆணையர் சசாங் சாய் உத்தரவில் திருவான்மியூர் உதவி ஆய்வாளர் மகாராஜன் தலைமையில் காவலர்கள் ராஜசேகரன், செந்தில் ஆகியோர் அடங்கிய தனிப்படை 7 நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது, தனிப்படை போலீசார் கடந்த 7 நாட்களாக இரவு பகல் பாராமல் பெசன்ட் நகர் முதல் கேளம்பாக்கம் வரை சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுமார் 200 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை எங்கெல்லாம் சென்று தப்புயுள்ளார்கள் என விசாரணை மேற்கொண்டு கேளம்பாக்கத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஆந்திராவை சேர்ந்த தனபால், கங்கா, திருப்பி, வெங்கடேஷ், ஹைதராபாத்தை சேர்ந்த ராஜீவ், மற்றும் சென்னையை சேர்ந்த சரவணராஜாவை சுற்றிவளைத்து கைது செய்து அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள், 30000 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்தனர். 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர்கள் மீது பதிவாகியுள்ளது. இவர்கள் கடந்த 4 மாதங்களாக வாடகைக்கு வீடு எடுத்து கேளம்பாக்கத்தில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கொள்ளை கும்பலின் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் திருவான்மியூர் போலீசார் வழக்குபதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்டு 7 நாட்களில் இந்த ஆந்திர கொள்ளை கும்பலை கைது செய்த தனிப்படையை சேர்ந்த உதவி ஆய்வாளர் மகாராஜன், மற்றும் காவலர்கள் ராஜசேகரன், செந்தில் ஆகியோரை காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

The gang arrested in the bank was arrested