துறைமுக பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு- வீடியோ

2018-12-27 826

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள வார்பு பகுதியில் காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் பாறைகளுக்குள் சிக்கி இருப்பதாக காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாறைகளுக்கு நடுவே இருந்த சடலத்தை கிரேன் உதவியுடன் சுமார் 5 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட சடலம் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என்றும், அவர் இறந்து 3 நாட்கள் இருக்கும் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Des: Unidentified male body recovery in the port area

Videos similaires