ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசியில்லை.. அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு- வீடியோ

2018-12-27 1,339

வேலூர் மாவட்டம் , சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தேர்தல் பூத் கமிட்டி குறித்த ஆலோசனைக்கூட்டம் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் வீரமணி தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேசினார்.அப்போது டி.டி.வி.தினகரனை விமர்சித்து பேசிய அவர், நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் அணியானது ஆடி அடங்கிய பிறகு ஒரு சுருக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், நாளடைவில் அக்கட்சி காணாமல் போய்விடும் என்று பேசினார்.மேலும் அதிமுக அழிந்து விடும் என தினம் தினம் அறிக்கையின் மூலம் 3 நாட்கள்,மாதங்கள் 6 மாதங்கள் என கெடு வைத்த தினகரன் தற்போது அவரே இருப்பாரா அல்லது இல்லையா என்ற அறிக்கையை எதிர்பார்த்து காத்திருப்பதாக விமர்சித்தார். தொடர்ந்து ஸ்டாலின் பற்றி பேசிய அவர், தமிழகத்தின் முதல்வராகும் இராசி இல்லை என விமர்சித்து பேசினார்.ஒரு மாநிலத்தின் தலைவராக இருக்கும் அவன் சென்னையிலுள்ள கொளத்தூர் தொகுத்தியில் மட்டும் அவனால் மருத்துவமுகாம்,கிறித்துமஸ் விழா போன்றவற்றை நடத்துவதாகவும்,அவன் கொளத்தூர் தொகுதிக்கு மட்டுமே மாநிலத்தலைவர் என கிண்டலாக கூறினார்.மேலும் அவன் தன்னை தமிழகத்தின் முதல்வராக அறிவித்துவிட்டதை போல பேசுவதாகவும்,அவன் கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே ஆக முடியும் என விமர்சித்தார்



Des: Stalin was the chief minister of the state .... Minister M.Sampath talks

Videos similaires