மருத்துவமனை வளாகத்தில் மது அருந்திய ஊழியர்கள்-வீடியோ

2018-12-24 366

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கோதநல்லூர் பகுதியில் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டிய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஊழியர்கள் மது அருந்திய சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியர்களின் குடியிருப்புக்காக 5 கட்டிடங்கள் உள்ளன. இக்கட்டிடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஊழியர்கள் குடியிருக்காததால் பாழடைந்த நிலையில் காணப்பட்டாலும் ஒரு கட்டிடத்தில் மட்டும் அங்குள்ள ஊழியர்கள் தங்கள் தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். கட்டிடங்களை சுற்றிலும் மதுபான பாட்டில்களும் தண்ணீர் பாக்கெட்களும் ஏராளமாக காணப்படும் நிலையில், ஊழியர்கள் மது அருந்துவதற்காக மதுபானம், தண்ணீர், நொறுக்கு தீனிகளுடன் கட்டிடத்திற்குள் புகுந்தனர். அதை கண்ட அப்பகுதி மக்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் சோதனையிட முயன்றனர். இதற்கிடையே சுதாரித்து கொண்ட ஊழியர்கள் கட்டிடத்தின் முன் கதவை மூடிவிட்டு மதுபானங்களையும் பொருட்களையும் எடுத்து கொண்டு பின்வாசல் வழியாக தப்பியோடினர். இதனால், சோதனையிட வந்த அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர் சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டிய மருத்துவமனை வளாகத்தில் மதுபானம் அருந்தும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Des: In the government hospital premises to protect the health of Kothanallur area near Marthandam in Kumari district,

Videos similaires