பணிமனையில் தரைத்தளம் அமைக்க 50 லட்சம் நிதிஒதுக்கீடு… பூமிபூஜையுடன் பணி துவக்கம்- வீடியோ

2018-12-18 259

குன்றத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நத்தம் பகுதியில் அரசு மாநகர போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வருகிறது. இப்பணிமனையில், தரைத்தளம் அமைக்க ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மோம்பாட்டு நிதியின் கீழ் ரூ 50 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், பணிமனை பகுதியில், தரைத்தளம் அமைப்பதற்கான பூமிபூஜை பணிமனை வளாகத்தில் நடைபெற்றது. மாநாகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்புஆப்ரகாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு போக்குவரத்து கழக மனிதவள பொதுமேலாளர் ஜோசப்டயாஸ், பொது மேலாளர் தொழில்நுட்பம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி, மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன்ஆகியோர் கலந்துக்கொண்டு பூமிபூஜையை தொடங்கிவைத்தனர். இதில் போக்குவரத்து கழக அதிகாரிகள் தட்சணாமூர்த்தி, மணிமேகலை, குன்றத்தூர் பணிமனை கிளைமேலாளர் ஞானஅருண்குமார், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் எழிச்சூர் ராமசந்திரன் உள்ளிச்சோர் கலந்துக்கொண்டனர்.

DES : 50 lakh finance funding ... start work with earthquake

Videos similaires