அணையால் விவசாயிகள் பாதிக்கபடுவது நிதர்சனமான உண்மை… சரத்குமார் பேட்டி- வீடியோ

2018-12-15 392



மேகதாதுவில் கர்நாடக அணைக்கட்டினால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது நிதர்சனமான உண்மை என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்

வேலூர்மாவட்டம்,ஆம்பூரில் கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் வந்தார் விழாவில் கலந்துகொண்ட பின்னர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் மத்திய அரசின் செயல்பாட்டால் மக்களும் விவசாயிகளும் கடுமையான அதிர்ச்சியில் இருந்தனர் அதன் வெளிபாடவே தற்போது முடிந்துள்ள தேர்தலில் பாஜகவிற்கு காட்டுகிறது சமத்துவ மக்கள் கட்சி பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் கூட்டணி குறித்து முடிவு செய்யும் மேகதாதுவில் கர்நாடக அனைக்கட்டினால் தமிழக டெல்டா விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது நிதர்சனமான உண்மை இதனை மத்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினார்



Des: The All India Equality People's Party leader Sarath Kumar said that the fact that the Delta district farmers will be affected by Karnataka's all-inclusive condition

Videos similaires