குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர்… பொதுமக்கள் தர்ம அடி- வீடியோ

2018-12-15 595

திருப்பூரிலிருந்து பழனி நோக்கி சென்ற அரசுபேருந்தை சகுனிபாளையத்தை சேர்ந்த சேனாபதி என்பவர் ஓட்டிவந்துள்ளார் . அப்பேருந்து வரும் வழியிலெல்லாம் சாலையில் வரும் போகும் வாகனங்களின் மீது அடிக்கடி மோதுவதுபோல் வரவே பயணிகள் மிகுந்த அச்சத்துடனே பேருந்தில் பயணம் செய்துள்ளதோடு சிலர் பாதுகாப்பாக பேருந்தை ஓட்டும்படி கூறியும் கேட்காத ஓட்டுனர் சேனாபதி பல இடங்களில் விபத்து ஏற்படும் வகையிலேயே தொடர்ந்து பேருந்தை இயக்கிய நிலையில் அப்பேருந்து தாராபுரம் அருகேயுள்ள சீத்தகாடு பகுதியில் வந்த பொழுது அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது பேருந்து மோத முயன்றதால் அங்கு நின்றிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு சிதறி ஓடியுள்ளனர் இதை தொடர்ந்து போருந்தில் உள்ளவர்களும் கூச்சலிடவே அப்பகுதி பொதுமக்கள் பேருந்தை நிறுத்திய பொழுது குடிபோதையில் இருந்த பேருந்தின் ஓட்டுனர் சேனாபதி அங்கிருந்து ஓட முயன்றதால் அவரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடிகொடுத்து கேட்டபொழுது அந்த பேருந்து பழனி அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து என்பதும் ஓட்டுனர் சேனாபதி குடிபோதையில் பேருந்தை இயக்கி பலமுறை சஸ்பெண்ட் ஆனவர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடம் வந்து பொதுமக்களிடமிருந்து போதை ஓட்டுனர் சேனாபதியை மீட்ட தாராபுரம் போலீசார் அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்துவருகின்றனர்.

Des : The public duties to the bus driver who drove the bus and drove the bus

Videos similaires