3 மாநில முதல்வர்கள் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த மாநிலங்களில் குறைந்தபட்சம் தலா இரண்டு பேராவது முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.