தமிழகத்திற்கு பிரதமர் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்ற மதிமுக பொது செயலாளர் வைகோவின் சவாலை ஏற்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போதுமதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனக்கு எதிராக நடந்த மிகப்பெரிய சதிச்செயலை கண்டித்து திமுகவில் இருந்து வெளியேறி, அதற்கு காரணமானவர்களை பழிவாங்குவேன் என சபதம் எடுத்தார். ஆனால் வைகோ தனது நிலைபாட்டில் இருந்து மாறி, எந்த தீய சக்திக்கு எதிராக போராடுவேன் என சொன்னாரோ,அந்த தீய சக்திகளுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் நடந்து வருவது அவருடைய நம்பகதன்மையை தமிழக மக்களிடம் கேள்விக்குறியாக்கி இருக்கின்றது என தெரிவித்தார்.தமிழகத்திற்கு பிரதமர் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்ற வார்த்தைகளை மதிமுக பொது செயலாளர் வைகோ பயன்படுத்தி இருப்பது சிலரை திருப்தி செய்யவும், அரசியல் ரீதியான ஆதயம் தேடுவதற்கும் என கூறிய அவர், வைகோவின் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.தமிழகத்திற்கு பிரதமர் மோடி நிச்சயம் வருவார் எனவும் அப்போது நடக்கும் எந்த விதமான போராட்டங்கள் நடத்தினாலும் அதை எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
Des: Union Minister of State for Consumer Affairs, Ponnadhi Raghavirakshan said that the MDG General Secretary,