கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேலத்தில் 2ம் வகுப்பு மாணவி நேத்ரா தனது நண்பர்களுடன் ஸ்கேட்டிங் மூலம் கடை கடையாக சென்று தான் வசூலித்த 10 ஆயிரத்து 258 ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ரோகிணியிடம் வழங்கினார்...
கஜா புயலால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் பெரிய அளவில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்தவகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற வகையில் சேலத்தில் 1 ம் வகுப்பு மாணவி நேத்ரா தனது நண்பர்களுடன் சேர்ந்து ஸ்கேட்டிங் மூலம் கடை கடையாக சென்று பணம் வசூலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தார். தொடர்ந்து பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவே கடந்த இரண்டு நாட்களாக சேலம் பழைய பேருந்து நிலையம், சேலம் வணிகவளாகம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவிடுமாறு மாணவி கேட்டுக் கொண்டதையடுத்து வணிகர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் நிவாரண தொகையை வழங்கினர். அவ்வாறு 1.ம் வகுப்பு மாணவி நேத்ரா தனது நண்பர்களுடன் வசூலித்த 10 ஆயிரத்து 758 ரூபாய்க்கான காசோலையை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஸ்கேட்டிங்கில் வருகை தந்து மாவட்ட ஆட்சியர் ரோகிணியிடம் வழங்கினார். மாணவியிடம் காசோலையை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவியின் சமூக அக்கறைக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
Des: The act of the 2nd grade student