ஆங்கிலத்தில் நீங்கள் பேசினால் உங்களுக்கு மரியாதை,கௌரவம் வந்துவிடும் ஆங்கிலத்தை முழுவதும் படிக்கும் படி வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 10 பள்ளிகளை சேர்ந்த 4811 மாணவ,மாணவிர்களுக்கு 1 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய் மற்றும் அரசு அதிகாரிகள்,மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். வுனத்துறை அமைச்சர் திண்டக்கல் சீனிவாசன் இலவச மதிவண்டிகளை வழங்கி விட்டு பேசுகையில் பேசிய பள்ளி படிப்பில் ஆங்கிலத்தில் புலமைபெற்றுவிட்டால் உங்களை அறியாமலே தலைமைபண்பு வந்துவிடும்.அது உயர்வான தன்மையை கொடுத்துவிடும். ஆங்கிலத்தில் நீங்கள் பேசினால் உங்களுக்கு மரியாதை,கௌரவம் வந்துவிடும். எனவே இலக்கண பிலையில்லாமல் ஆசிரியர்,குருக்கள் சொல்வதை கேட்டு நீங்கள் நன்றாக அதை கேட்டு ஆங்கிலத்தை படியுங்கள் என்று வனத்துறை அமைச்சர் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
Des: If you speak in English, you will be honored and honored to study the whole English language. Forest Minister C.Srinivasan has spoken to the controversy