ஒரு தலை காதலால் பலியான மெர்சி...போராட்டத்தில் குதித்த சட்டமன்ற உறுப்பினர்கள்-வீடியோ

2018-11-30 863

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஒரு தலை காதலால் பட்டதாரி பெண்ணை குத்தி கொலை செய்த விவகாரம். குற்றவாளி க்கு உரிய தண்டனை வழங்கி பெண்ணின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தி இரண்டு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.



குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தக்கலை பெரிஞ்சிலம்பு பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண்ணான மெர்சி என்பவர் வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து வந்தார். அதே கடையில் சில மாதங்களுக்கு முன்பாக வேலை செய்து வந்த திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். காதலுக்கு மெர்சி மறுப்பு தெரிவித்தநிலையில் நேற்று தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் மெர்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்ற ரவீந்திரனை பொது மக்கள் மடக்கிப்பிடித்து வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தலைமையில் பெரிஞ்சிலம்பு ஊர் பொதுமக்கள் சார்பாக குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கி பட்டதாரி மெர்சியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமாரபுரம் சந்திப்பில் ஆர்பாட்டம் நடைபெற்றுது

Des: Mercy killed by a head lover ... legislators jumping in the fight

Videos similaires