நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்… எம்பி தம்பிதுரை உறுதி- வீடியோ

2018-11-27 1,575

காவிரி பிரச்சனைக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது போல் கஜா புயல் நிவாரனத்திற்கும் 50-அதிமுக எம்.பி.க்களும் குரல் கொடுப்போம்.என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்

கரூரில் மனுக்களை பெறும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உரிய அதிகாரிகளிடம் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,கஜா புயலால் நாகை,திருவாரூர்,தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வரும் 11-ம் தேதி நாடாளுமன்றம் கூட இருக்கிறது. அதிமுகவின் 37-நாடாளுமன்ற உறுப்பினர்களும்,13-மேலவை உறுப்பினர்களும் சேர்த்து 50-உறுப்பினர்களும் காவிரிபிரச்சனைக்கு எப்படிகுரல் கொடுத்தோமோ அதே போல் கஜா புயலுக்கும் குரல் கொடுத்து எந்தாலவிற்கு நிவாரனம் பெற வேண்டுமோ அதனை பெறுவதற்குண்டான அத்தனை முயற்சிகளையும் மெற்கொள்வோம் என்றார்.

Des: We will give voice to the Cauvery storm and the 50-strong MPs as the voice of the Cauvery dispute in Parliament, said the Deputy Speaker of the Lok Sabha Speaker Thambidurai.

Videos similaires