கூத்து நடத்துவதில் ஏற்பட்ட போட்டி …இளைஞர் சுட்டு கொலை-வீடியோ

2018-11-27 1,010

கூத்து நடத்துவதில் ஏற்பட்ட போட்டி காரணமாக இளைஞர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெரிய கல்வராயன் மலை பகுதியை சேர்ந்த கலகாம்பாடி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்ற இளைஞர் சக நண்பர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் இருந்து நண்பர்களுடன் வன பகுதிக்கு வேட்டைக்கு சென்றுளார். மாலை நான்கு மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த சிலர் செல்வராஜை சடலமாக கொண்டு சென்று அவரது வீட்டின் முன்பாக வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.வேட்டை சென்ற செல்வராஜ் உயிரிழந்த நிலையில் கண்டதும் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கல்வராயன் காவல் நிலையத்தினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில், செல்வராஜின் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது தெரியவந்தது. கலகம்பாடி கிராமத்தில் இளைஞர்களிடையே கூத்து நடத்துவதில் போட்டி நிலவி வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக, செல்வராஜை வேட்டைக்கு அழைத்து சென்ற அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி சூட்டில் மலைவாழ் பகுதியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Des; The youth has been shot dead by a gunshot wounded in a clash

Videos similaires