தெருநாய்கள் கடித்து 30 ஆடுகள் உயிரிழப்பு-வீடியோ

2018-11-24 944

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் சிடுவம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி அர்த்தனாரி இவர் சிடுவம்பட்டி வன பகுதியில் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார் நேற்று இரவு வீட்டிற்கு அருகே உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்தார் காலை சென்று பார்த்த போது 5 ஆடுகள் 25 –க்கும் மேற்பட்ட குட்டி ஆடுகள் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தன இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் கமலநாதன், கிராம நிர்வாக அலுவலர் ரவி மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அந்த ஆடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்து சம்பவ இடத்திலேயே அடக்கம் செய்தனர். இது குறித்து கால்நடை மருத்துவர் கூறும்போது சிடுவம்பட்டி பகுதியில் 30 ஆடுகள் தெருநாய்கள் கடித்து உயிரிழந்துள்ளது மர்ம விலங்கு கடிக்கவில்லை என்றார்.

Des: 30 goats bite street bites

Videos similaires