திருப்பதியில் தமிழக அமைச்சர் மணிகண்டன்- வீடியோ

2018-11-24 694

தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் இன்று காலை திருப்பதி கோவில் ஏழுமலையானை கும்பிட்டார். சாமி தரிசனத்திற்குப் பின்னர் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பாதங்களை வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் மணிகண்டனுக்கு தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.பின்னர் கோயிலுக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மணிகண்டன்,கஜா புயல் தாக்கத்திலிருந்து தமிழக மக்கள் விரைவில் மீள வேண்டும் என்றும், தமிழக மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்றும், எதிர்வரும் காலங்களில் இது போன்ற சில இது போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் அவற்றை சிறப்பாக கையாளும் திறனை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் ஏழுமலையானிடம் வேண்டி கொண்டேன் என்று கூறினார்.மேலும் கஜா புயல் தாக்கத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்களை வெளி கொணர்வதற்காக தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்று கூறினார்.

Des: From the Gajagitta to the Lord Shiva in Tirupati!

Videos similaires