பாம்பு விவசாயிகளின் நண்பன்-வீடியோ

2018-11-22 1

மரத்திற்கு மரம் தாவும் எலிகளை விரட்டிப்பிடித்து வேட்டையாடும்.சில சமயம் தென்னை மரத்தில் தொங்கியபடி ஊஞ்சலாடும்.இரவில் கோழிக்குஞ்சை அபகரிக்க கூண்டிற்குள் தலையை நீட்டும்.இப்படி பலகாலமாய் சுற்றிவந்தது எங்கள் பண்ணைத்தோட்டத்தில் ஒரு பாம்பு.ஆனால் இன்று காலையில் வேலியில் உள்ள வலையில் வசமாய் சிக்கிக்கொண்டது.அதை எப்படியும் காப்பாற்ற வேண்டுமென்று களமிறங்க அருகில் விடாமல் சீறித்தள்ளியது ஆறு அடி நீளமுள்ள அந்த பாம்புதோட்ட ஆளோ பயத்தில் தூர நிற்க கையில் கத்தியோடு அருகில் அமர்ந்து காயம் படாமல் வலையை வெட்டி பாம்பை விடுவித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.இந்த ஆபத்தான முயற்சி பாம்பைக் கொல்லக்கூடாது.அது விவசாயிகளின் நண்பன். என் கண்முன்னே இந்தப் பாம்பு தேங்காய் குரும்பைகளை கடித்தெறியும் எலிகளை விரட்டிப்பிடித்து விழுங்கியிருக்கிறது.பாம்பைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே! இந்தப் பதிவு.

Des: Snake is a friend of farmers