முதல்வர் தொகுதியில் இரட்டை கொலை-வீடியோ

2018-11-22 849

முதல்வர் நாராயணசாமி தொகுதியில் இரட்டை கொலை என்பதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள அண்ணா நகரில் மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து பிரெஞ்சு குடியுரிமை தம்பதிகள் பாலகிருஷ்ணன், ஹேமலதா ஆகிய இருவரையும் கொலை செய்து உள்ளனர் என்றும், மேலும் கொலை செய்யப்பட்ட பாலகிருஷ்ண அவர்கள் முன்னாள் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் அவர்களின் சம்பந்தி என்றும், போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்பு கொலை நடந்த வீடுக்கு முதல்வர் நாராயணசாமி அவர்கள் நேரடியாக வந்து பார்வையிட்டார்.

பின்பு இந்த கொலை சம்மந்தமாக, உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும், இந்த கொலை எதற்காக நடைபெற்றது என்று தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவு விட்டு உள்ளேன் என்று பேட்டி அளித்தார்.

Des: Since the Chief Minister Narayanasamy is a double murder in the constituency, there is a big stir in the area...

Videos similaires