பிரபல கொள்ளையன் பல்சர்பாபு கைது- வீடியோ

2018-11-21 442

காவல்துறையினரிடமிருந்து கடந்த மாதம் தப்பிய பிரபல கொள்ளையன் பல்சர்பாபு கைது.

சென்னை வேப்பேரி காவல் நிலைய எல்லையில் வழிப்பறி,கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதால் பிரபல கொள்ளையன் பல்சர் பாபு கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.பின்பு குண்டாஸ் சட்டத்தில் சிறையில் இருந்த பல்சர் பாபுவை மூல நோய் சிகிச்சைக்காக கடந்த மாதம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தனர்.அப்போது அங்கிருந்த காவலர் இருசக்கர வாகனத்தில் பல்சர் பாபு தப்பி சென்றான்.இந்த நிலையில் தப்பி சென்ற பல்சர் பாபுவை பூவிருந்தவல்லி தனிப்படை காவல்துறையினர் பெருங்களத்தூர் அருகே கைது செய்தனர்.விசாரணை தப்பிய சில நாட்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து பூவிருந்தவல்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Des: The famous robber, Palestine arrested by the police last month, was arrested.

Videos similaires