40 லட்ச ரூபாய் மதிப்பிலான தேங்காய் எண்ணெய்யைக் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் லாரிக்கு தீவைத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்
தருமபுரி மாவட்டம் தொப்பூா் மலைப்பாதையில் கடந்த அக்டோபர் 21-ம் தேதி அதிகாலை தேங்காய் எண்ணெய் ஏற்றி வந்த லாரி தீடீா் என தீப்பிடித்து எரிந்தது. தீபிடித்த லாரிக்கு பின்னால் வந்த மற்றொரு லாரிஇரண்டு கார் என மொத்தம் நான்கு வாகனங்களுக்கும் தீ பரவி எரிந்து சாம்பலானது இந்தச் சம்பவத்தில் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான தேங்காய் எண்ணெய்யைக் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் லாரியில் இருந்து முக்கால்பாகம் தேங்காய் எண்ணெய்யை இறக்கிவிட்டுஇ கால் பங்கு தேங்காய் எண்ணெய்யுடன் லாரியை ஏரித்துள்ளதைசேலம் மாவட்ட போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர். லாரியில் திருடி பதுக்கி வைக்கப்பட்ட முக்கால் பங்கு தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்யஇ சேலம் மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றபோது லாரி டிரைவர் சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் சிக்கியுள்ளனர்.அவர்களிடம் சேலம் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தியபோது தொப்பூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு போட்டுக் கொடுத்த திட்டபடி தேங்காய் எண்ணெய்யை முக்கால் பங்கு பதுக்கி வைத்துவிட்டுஇ கால் பங்குஎண்ணெய்யுடன் லாரியை எரித்துவிட்டதாகவும் அதற்காக தொப்பூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுக்கு 5 லட்ச ரூபாய் பேசிஇ அட்வான்ஸ் 50 ஆயிரம் கொடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.இந்த தகவல் தர்மபுரி எஸ்.பி பண்டித் கங்காதருக்கு தெரிய வரவும்இ தொப்பூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுவை தருமபுரி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்தச் சம்பவம் தர்மபுரி மாவட்ட போலீஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Des: Police arrested a lorry driver for lorry purpose to smuggle coconut oil worth 40 lakh rupees