கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய சிறுவன் சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள்- வீடியோ

2018-11-20 1,606

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்டியலில் சேர்த்த சிறுசேமிப்பு பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய சிறுவன் சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள்

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசு மட்டுமன்றி தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என பலரும் நிதி உதவி, உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரப்பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து அரியலூரில் வழக்கறிஞராக உள்ள ஜெயக்குமார் என்பவரின் 9 ம் வகுப்பு படிக்கும் மகன் நிறைநெஞ்சன், மற்றும் 4 ம் வகுப்பு படிக்கும் சாதனா ஆகிய இருவரும் தாங்கள் உண்டியலில் கடந்த ஒரு வருடமாக சேமித்து வைத்த சிறுசேமிப்பு தொகையான ரூ.7.500 தொகையினை மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமியிடம் சகோதர சகோரிகள் வழங்கினர். சிறு வயதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தங்களது சிறுசேமிப்பு பணத்தை வழங்கிய சகோதர சகோதரிகளை மாவ்ட ஆட்சியர் பாராட்டினார்

Des: Accompanying complimentary payments to the District Collector

Videos similaires