கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் ஆஜர்- வீடியோ

2018-11-16 593

போலி ஆவணங்கள் கொடுத்து சிம்கார்டு வாங்கிய வழக்கில் ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் ஆஜர் ஆகினர்



சென்னிமலை ,கடத்தூர் ,கோபி, அம்மாபேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குள் சிலர் போலி ஆவணங்கள் கொடுத்து செல்போன் சிம் கார்டுகள் வாங்கினார்கள் .இதுகுறித்த புகாரின் பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இதுதொடர்பாக மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த ரூபேஸ், வீரமணி, கண்ணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் .மேலும் அவர்கள் மீது ஈரோடு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி உமாமஹேஸ்வரி வழக்கை அடுத்த மாதம் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.முன்னதாக வழக்கில் ஆஜராவதற்காக ரூபேஷ் கேரள மாநிலம் திருச்சூர் ஜெயிலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஈரோடு கோர்ட்டில் ஆஜரானார். இவர்கள் கோர்ட்டில் வரவில்லை வீரமணி ,கண்ணன் ஆகியோரிடம் நீதிபதி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை நடத்தினார்.

Des: Maoists call in Erode court case

Videos similaires