மாணவன் மீது மின்சாரம் பாய்ந்து பலி-வீடியோ

2018-11-15 713

மின்கம்பம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த, நான்காம் வகுப்பு மாணவன் மீது மின்சாரம் பாய்ந்து பலியானார்.





திருத்தணி அடுத்த அகூர் காலனியைச் சேர்ந்தவர் பெருமாள்,42. கூலி தொழிலாளி. இவரது மனைவி சோனியா. கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு பேரரசு,12 எட்டாம் வகுப்பும், இரண்டாவது மகன் வல்லரசு,9 நான்காம் வகுப்பு, என அதே கிராமத்தில் உள்ள சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை வல்லரசு அதே பகுதியை சேர்ந்த சில குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அங்குள்ள டிரான்ஸ்பார்மர் அமைத்துள்ள மின்கம்பியில் உள்ள ஸ்டே கம்பை பிடித்து ஆடியுள்ளார்.அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்டே கம்பி மீது மின்சாரம் பாய்ந்து வல்லரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இது குறித்து தகவல் அறிந்ததும் தந்தை பெருமாள், மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கதறி அழுதனர். மேலும் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் பிணத்தை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவத்தால் அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியது

Des: Electricity crashed into a fourth class student who was playing near the wrist.

Videos similaires