பெரம்பலூர் மாவட்ட ம் குன்னம் அருகே உள்ள அசூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லசாமி-ராஜேஸ்வரி, தம்பதியினர் இவர்கள் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள ராஷினி நகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவரது. இளைய மகன் பரத்குமார்(16), பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் +1 படித்து வந்தார்.இந்நிலையில் பரத்குமாருக்கு சாப்பாடு சமைத்து கொடுத்து விட்டு பள்ளியில் நடைபெறும் சிறப்பு வகுப்பிற்கு சென்று வருமாறு கூறிய செல்லசாமியும் அவரது மனைவி ராஜேஸ்வரியும் சொந்த கிராமமான அசூருக்கு விவசாய நிலத்தை பார்க்க சென்றவர்கள் மீண்டும் இரவு 7.30 மணியளவில் பெரம்பலூரிலுள்ள தங்களது வாடகை வீட்டிற்கு வந்துள்ளனர்.வீட்டின் கதவு உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது பரத்குமார் தூக்கில் சடலமாக தொக்கியுள்ளார்.
இதுகுறித்து செல்லசாமி அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் சடலமாக தொங்கிய பள்ளி மாணவன் பரத்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் ஜீஹெச்சுக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து பரத்குமாரின் தற்கொலைக்கு பள்ளியில் படிக்க வேண்டும் என கொடுக்கப்படும் நெறுக்கடியா, பெற்றோர் ஏதேனும் கண்டித்தனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, சக பள்ளி மாணவ, மாணவர்கள் இச்சம்பவம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Des: The school student has committed suicide