பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் அனுமதி வழங்கியது போல டாஸ்மாக் மதுகடைகளை இரண்டு மணி நேரம்மட்டுமே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கேட்டுகொண்டார் .திருவள்ளூர் வைத்திய வீரராகவர் சாமி கோவிலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அமாவாசை,முன்னிட்டு ஹிருதபநாசினி குளத்தில் வெள்ளம் பால்உப்பு கரைத்து வழிபாடு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் டெங்கு காய்ச்சல் மக்களுக்கு பரவாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மர்ம காய்ச்சல் என்று கூறுவதற்கு பதில் என்ன மர்மம் என்பதை விஜயபாஸ்கர் விளக்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தீபாவளி பண்டிகை நேரங்களில் பட்டாசு வெடிக்க மட்டும் இரண்டு மணி நேரம் என்று கால நிர்ணயம் செய்வது போன்ற அரசு டாஸ்மாக் கடையின் விற்பனையும் இரண்டு மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
Des: Pramalatha Vijayakanth asked me to take action to open the dosage for two hours as the fire had been cleared for two hours.