தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த, பிரபல கொள்ளையனை கைது செய்த காவல்துறையினர் 16 இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை புறநகர் பகுதியான மாங்காடு, பூவிருந்தவல்லி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டும் இருசக்கர வாகனம் அடுத்தடுத்து திருடு போகி வந்தன.இதையடுத்து மாங்காடு காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் மாங்காடு அருகே சிக்ராயபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது அவ்வழியே வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர்.அதில் வண்டிக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது மேலும் அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோதுமாங்காடு, நெல்லிமா நகரை சேர்ந்த சரத்பாபு(35), என்பதும் வேலுர்,குடியாத்தம் போன்ற பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு குண்டாஸில் கைதாகி இருந்ததும் தெரிய வந்தது. மேலும் வேலூரில் காவல்துறையின் கெடுபிடியால் சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இங்கு அதிகாலையில் வீட்டில் இருந்து கிளம்பி மாங்காடு, பூவிருந்தவல்லி ஆகிய பகுதிகளில்வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இருசக்கர வாகனத்தை திருடி அவரது கூட்டாளி தண்டபாணியுடன் விற்பனை செய்து வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சரத்பாபுவிடமிருந்து 16 இருசக்கர வாகனத்தைபறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள தண்டபாணியை தேடி வருகின்றனர்
Des: Police seized a 16-year-old vehicle who was arrested by a famous burglary who was involved in bicycle robbery.