தீபாவளி ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சி- வீடியோ

2018-10-25 617

தீபாவளிப் பண்டிகையையொட்டி, திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள பூம்புகார் நிறுவனம் தீபாவளி ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சியைத் தொடங்கியுள்ளது. இவற்றை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசிப்பதோடு, விரும்பி வாங்கியும் செல்கின்றனர்.

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பூம்புகார் நிறுவனம் தீபாவளி ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சிகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.
அதனையொட்டி, திருச்சி சிங்காரத்தோப்பில் தொடங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியை ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி முதல்வர் ராதிகா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் 40 கிராம் அசாம் பட்டுப் புடவைகள், வாழ்நாள் பட்டுப்புடவைகள், சுங்கடிப் புடவைகள், ராஜஸ்தான் சுடிதார், ராஜஸ்தான் மெத்தை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான ஆடைகளும், ஆபரணங்களும் 200 முதல் 8000 வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் கண்டு ரசிப்பதோடு, 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுவதால், அவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

Des: With the Diwali festival, the Poompuhar Institute of Trichy Singarathope has started the exhibition of Diwali dresses and ornaments.

Videos similaires