கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே எட்டாம் வகுப்பு மாணவன் மர்ம மரணம். சக மாணவன் அளித்த மாத்திரையால் இறந்திருக்கலாம் என தகவல் அறிந்த பெற்றோர் உண்மை கண்டறிய கேட்டு புகார். இரணியல் போலீசார் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்த நகைத்தொழிலாளியான ரமேஷ் என்பவர் மகன் நிஷாந்த்(15) அருகிலுள்ள மாடத்தட்டுவிளை தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்று மதியம் திடீரென மயக்கமடைந்து விழுந்த நிலையில், தக்கலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது நிஷாந்தின் உயிரிழந்தது தெரிய வந்தது. மகனின் மரணத்திற்கான காரணம் குறித்து பெற்றோரின் விசாரணையில் சக மாணவன் அளித்த மாத்திரையை சாப்பிட்டதால் நிஷாந்த் மயக்கமடைந்ததாக தகவல் தெரிய வந்த நிலையில், பெற்றோர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையொட்டி, போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூர் ஆய்வுக்கு அனுப்பியதோடு மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Des: The mystery of the eighth grade student near Takkalai in Kanyakumari district. Parents who are informed that they may have died by a fellow student who complained and asked to report the truth. Investigative of Irrigation Police