கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு காதலிக்க மறுத்ததால் வாலிபர் வெறிச்செயல்
சேலம் குகை பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி வயது 31 இவரது கணவர் பாலமுருகன். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு காயத்ரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சீனிவாசனுடனான பழக்கத்தை காயத்ரி நிறுத்தி கொண்டதால் தொடர்ந்து பழகுமாறு சீனிவாசன் வற்புறுத்தியுள்ளார். இதற்கு காயத்ரி மறுக்கவே ஆத்திரமடைந்த சீனிவாசன் இன்று காலை வழக்கம் போல் தன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல காயத்ரி வீட்டைவிட்டு வெளியே வந்தபோது சீனிவாசன் கையில் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை காயத்ரி முகத்தில் வீசி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த காயத்திரி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சம்பவம் குறித்து செவ்வாபேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பிச் சென்ற சீனிவாசனை தேடி வருகின்றனர். மேலும் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட குற்றவியல் நீதிபதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயத்ரியிடம் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Des: Woman hunt for refusing to love academy on teenager