சென்னையில் மாயமான இரண்டு சிறுவர்கள் ஆம்பூர் ரயில் நிலையத்தில் மீட்பு; பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியதாக ரயில்வே போலீசாரிடம் சிறுவர்கள் வாக்குமூலம் வேலூர் மாவட்டம், ஆம்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் பகுதியில் சுற்றிதிரிந்த இரண்டு சிறுவர்களிடம் ஜோலார்பேட்டை ரயில்வே துணை உதவி ஆய்வாளர் சௌந்தரராஜன் தலைமையிலான ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்ட போது சென்னை போரூர், பெரியப்பஞ்சேரி பகுதியை சேர்ந்த அஜீத்குமார் மற்றும் ஹரீஷ் எனவும்,வீட்டில் பெற்றோர் திட்டியதால் கோபித்துகொண்டு சென்னையில் இருந்து ரயில் மூலம் பெங்களூர் சென்ற சிறுவர்கள் அங்கிருந்து மீண்டும் ஆம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி அப்பகுதியில் உள்ள ஷு தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக வந்ததாக தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சிறுவர்களை ரயில்வே போலீசார் காட்பாடி ஹோப்ஹவுஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் ராணிபேட்டையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பெற்றோர் திட்டியதால் சென்னையில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள் ஆம்பூர் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Des: Two boys in Chennai were rescued at Ambur railway station