காவல் ஆய்வாளர் கெட்ட வார்த்தையால் திட்டியதால், எஸ்.ஐ. தற்கொலை முயற்சி-வீடியோ

2018-10-16 1

சக போலீசார் முன்னிலையில் காவல் ஆய்வாளர் கெட்ட வார்த்தையால் திட்டியதால் மனமுடைந்து உதவி ஆய்வாளர் காவல்நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தண்டிக்குடி காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருப்பவர் சுபக்குமார். இவர் அணிவகுப்பின் போது எஸ்.ஐ. முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முருகேசன் காவல்நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைகண்ட சக காவலர்கள் முருகேசனை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். காவல்நிலையத்தில் எஸ்.ஐ. ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி முழுவதும் காட்டித்தீ போல பரவியது. இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் சுபக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சக காவலர்கள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.உயரதிகாரிகள் தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களை மனஉளைச்சல் தரும் அளவில் நடந்து கொள்ள கூடாது என காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Des: The incident that triggered a suicide attempt by a police inspector at the police station

Videos similaires