ஆம்பூர் அருகே நள்ளிரவில் விவசாய ஊற்று கால்வாய்களில் மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை மூன்று நாட்களாக காவல் காத்து கண்காணித்து பிடித்து வருவாய்துறையினரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்
வேலூர் மாவட்டம் ,ஆம்பூர் அடுத்த வடசேரி பகுதிகளில் சுமார் 10 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு ஊற்று நீர் பாசனம் செல்வதர்காக அமைக்கப்பட்ட ஊற்று கால்வாய்களில் உள்ள மண் தொடர்ந்து நள்ளிரவில் சுமார் 30 அடி வரை பள்ளம் தோண்டி டிராக்டர்களில் கடத்தப்பட்டு வந்தது.இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் பலமுறை வருவாய்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கைகளும் எடுக்காததால் கடந்த மூன்று நாட்களாக அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து காவல் காத்து கண்காணித்து வந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மண் அள்ள வந்த டிராக்டர் ,மண் அள்ள பயன்படுத்திய உபகரணங்களுடன் மண் கடத்தும் கும்பலை இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பிடித்து பின்னர் வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டர் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்
Des: The villagers who handed over the vehicle for three days to conduct a vehicle carrying mud trap at midnight near Ambur and handed over to the villagers