திமுக கடந்த காலத்தை திரும்பி பார்க்க வேண்டும்- அமைச்சர் பாண்டியராஜன்- வீடியோ

2018-10-13 141

பத்திரிக்கை சுதந்திரத்தை பற்றி பேசும் திமுக கடந்த காலத்தை திரும்பி பார்க்க வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கவர்னர் மாளிகை அளித்த புகாரின் பேரில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது நீதிமன்றம் அதனை தவறு என்று கூறி தற்பொழுது சுதந்திரமாக இருக்கிரார் நக்கிரன் கோபால் என்றார் பத்திரிக்கை சுதந்திரத்தை பற்றி பேச திமுகவிற்கு தகுதி இல்லை , தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் முழுமையாக உள்ளது,யாருக்கும் எந்த கெடுதலோ, அச்சுருத்தலும் இல்லை எனவும் தெரிவித்தார்.ஊடக நிருவனத்தில் புகுந்து அடித்தவர்கள் யாரென்று தெரியும், பத்திரிக்கை சுதந்திரத்தை பற்றி பேசும் திமுக கடந்த காலத்தை திரும்பி பார்க்க வேண்டும், பத்திரிக்கையாளர்களும் அதனை நினைவு கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.மேலும் எஸ்.வி.சேகர் மற்றும் எச்.ராஜா கைது செய்யபடவில்லை என்று பேசுவது அரசியலுக்காக பேசப்படும் விமர்சனங்கள் என்றும் சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது என்றும் எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் சட்டம் தன் கடமையை செய்யும் என்று கூறினார்.

Des: The DMK, who speaks about freedom of the press, should look back at the past, Minister Pandiarajan said

Videos similaires