உடுமலை அருகே வேன் கவிழ்ந்து மலைவாழ் கிராமத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை அருகே குருமலை, குழிப்பட்டி மற்றும் மாவடப்பு ஆகிய மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த கிராமங்களை சேர்ந்த 17 பேர் நேற்று மாலை தாங்கள் சேமித்த சிறுகாட்டு பொருட்களை விற்பனை செய்வதற்கு உடுமலை நகர் பகுதிக்கு சென்றனர்.