குடிநீர் வேண்டி காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் . அரியலூர் அருகே உள்ள பாலம்பாடி கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். குடிநீர் கடந்த ஒரு வார காலமாக சரிவர வினியோகம் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டி காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஜெமீன் ஆத்தூா் - அரியலூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூா் போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது குடி நீா் வினியோகம் செய்யாததால் -நிலத்தடி நீர் உப்பு நீர் என்பதால் அதனை பயன்படுத்த முடியவில்லை எனவும் காசு கொடுத்து வாங்க வசதி இல்லை எனவும் இக்கிராமம் அரியலூா் அருகே இருந்தாலும் பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ளது இதனாலே அதிகாரிகள் மெத்தன போக்கில் ஈடுபடுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டினா். இதனையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததின் பேரில் அவா்கள் கலைந்து சென்றனா்.
Des : Civilians were involved in road blocking with empty huts for drinking water