இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கல்வி சுற்றுலா மேற்கொள்ள இருக்கும் திருப்பூர் தனியார் பள்ளியை சேர்ந்த 100 மாணவர்களை பாராட்டி வழியனுப்பு விழா நடைபெற்றது.
திருப்பூரில் இருந்து இஸ்ரோவிற்கு கல்வி மற்றும் அறிவியல் சுற்றுலாவிற்கு செல்ல இருக்கும் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டுவிழா மற்றும் வழியனுப்பு விழா.திருப்பூரை அடுத்த ஊத்துகுளியில் உள்ள கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளி மாணவர்களிடையே அறிவியல் திறன் மேம்பாம்படுத்தவும், வின்வெளி ஆய்வு தொழில் நுட்பம் குறித்து அறிந்து கொள்ளும் விதமாகவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அறிவியல் அறிஞர்களிடையே கலந்துறையாடல் மூலமாக அறிவுத்திறனை மேம்படுத்தும் விதமாக நடைபெற உள்ள இச்சுற்றுலா வரும் 27 மற்றும் 28 ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ளது. இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையத்தின் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் விதமாக 55 மாணவர்கள் மற்றும் 45 மாணவிகள் என நூறு பேர் மற்றும் 10 ஆசிரியர்கள் குழு சுற்றுலா செல்கிறது. இக்குழுவிற்கு பாராட்டு மற்றும் வழியனுப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் தலைவர் தியாகராஜன்,முதல்வர் கிருஸ்ணமூர்த்தி, தொழில் அதிபர் கந்தசாமி உளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Des : The festive ceremony was held at the Tirupur private school to take part in educational tourism for the Indian Space Research Organization.