பேக்கிரி ஒன்றில் ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என நூதன விளம்பரம் அறிவிப்பு பலகை வைத்ததால் பொதுமக்கள் கடைக்கு குவிந்து வருகின்றனர் . வேலூர் அண்ணாசாலையில் உள்ள டிசி பேக்கரி என்ற தனியார் பேக்கரி நிறுவனம் இயங்கி வருகிறது இந்த நிறுவனம் இன்று நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கபடும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு கிலோ கேக் ரூ.495 எனவும் ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர் இதனை பார்த்த பொதுமக்கள் ஆர்ச்சயத்துடன் பார்த்து செல்கின்றனர் இது வியாபாரத்தில் ஒரு புதிய யுக்தியாக தான் தோன்றுகிறது
A packet of cigarettes in a packet is a petrol free pickup